தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனை மக்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளை பல் பொருள் அங்காடிகளை போல அனைத்து பொருட்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.அதன்படி பத்து ரூபாய்க்கு 24 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பாக்கெட் விற்பனையை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் ரேஷன் கடைகளில் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்கள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் பனைவெல்லம் மற்றும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ரூபாய் மதிப்பிலான 24 மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்து வருகிறது அரசு.இந்த பொருட்களை வாங்கச் சொல்லி மக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.