Categories
கல்வி

குஷியோ! குஷி..‌‌. இனி “தமிழ் வழி சான்றிதழை” பெற நேரில் செல்ல வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு.‌…!!!!

தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் தங்களுடைய தமிழ் வழி பெறுவதற்கு இனி இ சேவை மையத்தை அணுகினால் மட்டுமே போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை PSTM (person studied in Tamil medium) இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் சான்றிதழை பெற இ சேவை மையத்தில் விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன்பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அதை அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் பொதுவாக பயன்படுத்தும் இஎம்ஐஎஸ் தளத்தில் காண்பிக்கப்படும்.

இதனையடுத்து தலைமை ஆசிரியரும் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பதாரரின் பதிவேடுகளை சரிபார்த்து கையெழுத்து போட்டு உடனடியாக ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். ஒருவேளை விண்ணப்பதாரர் அனுப்பி இருக்கும் ஆவணங்களில் தவறுகள் இருப்பின் அதை நிராகரிக்கவும் தலைமை ஆசிரியருக்கு உரிமை உண்டு. மேலும் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிப்பது மூலம் மாணவர்கள் சுலபமான முறையில் தமிழ் வழி சான்றிதழை பெற்றுக் கொள்வதுடன், தலைமை ஆசிரியர்கள் இனி நேரில் வந்தால் தமிழ் வழி சான்றிதழை கொடுக்கக் கூடாது எனவும், இ சேவை மையத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தும் படியும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |