Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி தமிழிலேயே மருத்துவ படிப்பு படிக்கலாம்…. அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலையாளர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதாவது அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பை கற்பிக்க இருப்பதாகவும் அதற்காக மருத்துவ படைப்பிற்கான புத்தகங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்படுவதாகவும் விரைவில் இந்த ஏற்பாடுகள் முடிந்த இவை செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |