அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அகவிலை படியானது 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதித்துறை துணை செயலாளர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு அகவிலை படியானது அமுலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.