Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்வோருக்காக சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் நினைவாகத்தான் தற்போது தமிழகத்தில் இருந்து காசிக்கு தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |