குஷ்பு இணையும் கட்சி ஆட்சியை இழக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதாநாயகியாக இடம்பிடித்தவர் குஷ்பு. தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் இறங்கிய குஷ்பு திமுகவில் இணைந்தார். அவர் வழக்கமான சினிமா நட்சத்திரங்களை போன்று இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவே திமுகவில் குஷ்பு நடத்தப்பட்டார். ஆனால் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்து கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் குஷ்பு திமுகவை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். தற்போது காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார். குஷ்புவின் இந்த மாற்றம் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை வெளியீட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
அதில்,
”2009 இல் திமுகவில் இணைந்தார் – 2011 இல் திமுக ஆட்சி இழந்தது.
2013 இல் காங்கிரஸில் இணைந்தார் – 2014 இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
2020 இல் பா.ஜ.க – ஸ்வீட் எடு கொண்டாடு”