Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் இலவச பயணம் வேண்டும்…. குடிமகன்களின் தகராறு…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பேருந்தை நிறுத்தி குடிபோதையில் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். மேலும் பேருந்தை நிறுத்திய ஓட்டுனரிடம் குடிபோதையில் இரண்டு நபர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர்கள் பெண்களைப் போலவே எங்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இரண்டு நபர்களையும் அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து நடத்துனர் குடி போதையில் இருந்த அந்த நபர்களிடம் இதுகுறித்து நேரங்காப்பாளர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு பேருந்தை ஓட்டுனர் பின்னோக்கி இயக்கி அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனால் கோபி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |