Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சின்ன விஷயத்துக்கு இப்படி செய்யணுமா…? வாலிபருக்கு நடந்த கொடூரம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பறக்கைகுளம் பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மதுபான கடை மூடப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று குறைவால் மீண்டும் திறக்கப்பட்ட அந்த மதுபான கடையில் பறக்கைகுளம் பகுதியில் வசிக்கும் சாலி என்பவர் மதுபானங்களைை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு வலிகொலி அம்மன் கோயில் சாலையில் சாலி தனது நண்பர்களான பிரபு, அய்யப்பன், சுரேஷ் போன்றோருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அந்த நான்கு பேரும் இணைந்து குடிபோதையில் லிங்கத்தை சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் கோவத்தில் லிங்கம் தனது நண்பர்களான ஐயப்பன், சந்தோஷ் போன்ற நண்பர்களை அழைத்து வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து மது போதையில் ஆத்திரமடைந்த சாலியும் அவரது நண்பர்களும் ஐயப்பனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஐயப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளான 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |