Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காற்றின் தீவிர வேகம்”10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் இருக்கும் மூங்கில் கொல்லையில் கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் செந்தில், செல்வம் ஆகிய இருவரின் குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்துள்ளது. இதனால் அவர்களின் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் வேகமாக தீ பரவியதால் அடுத்தடுத்து இருந்த அந்தோணிசாமி, பாலசுப்ரமணியன், ஜானகிராமன், முத்துக்குமார் ஆகியோரின் குடிசை வீட்டிலும் தீ பற்றியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் குடிசை வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் குறித்து நேரில் என்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ அன்பழகன், நிலவள வங்கி தலைவரான அறிவழகன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான செந்தில் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |