எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்காவை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் காவல்துறையினர் அதன் உள்ளே சென்று சோதனை செய்த போது கேட்பாரற்றுக் கிடந்த பையை பார்த்துள்ளனர்.
அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா, ஹன்ஸ் ஆகிய பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் ரஜினி குமார் என்பவர் கர்நாடகாவிலிருந்து ஹான்ஸ் மற்றும் குட்காவை கடத்தி வந்தது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.