Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு வருண்குமாருக்கு திருத்தணி வழியாக குட்கா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் புதிய பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அன்பரசு மற்றும் பாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் இரு சக்கர வாகனங்களில் குட்கா கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குட்கா கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 40 கிலோ குட்கா மற்றும் 2 இரு சக்கிர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |