பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். நேற்று அர்ச்சனா ,நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் வந்திருந்தனர் . இன்று வெளியான முதல் புரோமோ வில் சுசித்ரா , சம்யுக்தா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவிலிருந்து கிட்டத்தட்ட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது தெரிகிறது.
#Day100 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/sOaDy2NUoc
— Vijay Television (@vijaytelevision) January 12, 2021
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வில் பேசிய ரேகா ‘கடந்து வந்த பாதை டாஸ்க்கில் ஒரு விஷயத்தைக் கூற நினைத்தேன் . என் அப்பாவை பற்றி சொல்ல வேண்டும் என நினைத்தேன். நான் நடிகையாக பிஸியாக இருந்தபோது என்னுடன் என் அம்மா கூடவே இருந்தார்கள் . இதனால் அப்பாவை கவனிக்க முடியவில்லை . பின்னர் உடல்நலக் கோளாறு காரணமாக அப்பா இறந்து விட்டார். நான் அவரை கவனிக்காததால் தான் அவர் இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சி இன்றும் இருக்கிறது ‘ என கதறி அழுகிறார் . இதைக் கேட்ட மற்ற போட்டியாளர்களும் கண் கலங்குகின்றனர்.