Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…!

சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியுள்ளது. இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

Categories

Tech |