Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. ஒட்டுமொத்தமாக தடை உத்தரவு

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும்  பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் அருவிகளில் வந்து குளித்து விட்டு செல்வார்கள். இதனையடுத்து அருவிகளுக்கு குளிக்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதோடு சமூக இடைவெளியுடன் நின்று குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக காலை 10 மணி முதலே மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.  இதனைத் தொடர்ந்து மதிய வேளையில்  பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு சென்றனர்.

Categories

Tech |