குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ரோந்து பிரிவு காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு ரோந்து பிரிவு காவல்துறையினருக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் சட்டையில் பொருத்தக்கூடிய கேமரா ஆகியவற்றை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்டத்தை 92 பகுதிகளாக பிரித்து ரோந்து பணி நடைபெறுகிறது.
இதனையடுத்து காவல்துறையினருக்கு இருசக்கர வாகனம் மற்றும் சட்டையில் பொருத்தும் கேமரா ஆகியவை வழங்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இந்த ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறையினர் அந்தப் பகுதியின் முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என்றும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் வசிக்கிறார்களா என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்களை தினசரி சந்தித்து அவர்கள் தொடர்புகொள்ளும் விதத்தில் வாட்ஸ் அப் குழு ஒன்று அமைக்க வேண்டும்.
அந்த குழுவில் காவல்துறையினரின் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் ரோந்து செல்லும் இடங்களில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க எந்த எந்த இடங்களில் சி.சி.டிவி. கேமரா அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ரோந்து பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறையினரை காவல்நிலைய பணிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரோந்து பணிக்கு செல்லும் போது காவல்துறையினர் கட்டாயம் சட்டையில் கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.