Categories
தேசிய செய்திகள்

குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் – பா.ஜ.க. உமாபாரதி…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி தான் குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டாவிற்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. செல்வி உமாபாரதி எழுதிய கடிதத்தில் பாபர் மசூதி வழக்கில் தான் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் என்ன தீர்ப்பு வரும் என்று தனக்குத் தெரியும் என்றும் அதைப் பற்றிக் கவலை இல்லையென்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அயோத்தி கரசேவை இயக்கத்தில் பங்குபெற்றதற்காக பெருமைப்படுவதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |