கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை பிடிக்க தவறிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக இருந்த சிபிசக்கரவர்த்தி தலைமையில் டவுன் காவல்துறையினர் ஜீவா நகர் பகுதியில் கட்டபஞ்சாயத்து மற்றும் கஞ்சா கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்த டீல் இம்தியாஸின் குடோனில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள் மற்றும் பத்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர். இதனால் தான் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதாக பல அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதன்பின் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியை சரக டி.ஐ.ஜி ஏ.ஜி. பாபு பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதனை போல் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த டீல் இம்தியாஸை பிடிக்க தவறியதாக துணை காவல்துறை சூப்பிரண்டு பழனிசெல்வதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிபிசக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதால் அதிகாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.