Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி ஏர்கிராப்டை தரையிறக்கிய அஜித்… வைரலான வீடியோ…


நடிகர் அஜித் குட்டி ஏர்கிராப்டை கவனமாக தரையிறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டியும் பைக் ரேஸ், டிரோன், குட்டி ஏர்கிராப்ட் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயங்கும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்றது.

அதை கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட்டு நடிகர் அஜித் சரியாக தரையிரக்குவதில் வெற்றிகொண்டார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தின் தக்சா குழுவினருக்கு வழிகாட்டி வருகிறார். அவர்களுடன் இணைந்து உருவாக்கிய ட்ரான்கள் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடு விதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும், கட்டுபாட்டு விதிகளை அறிவிக்கவும் இந்த போன்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |