Categories
பல்சுவை

“கொரோனா” விரட்டியடிக்க என்ன தேவை…. குட்டி கதை….!!

தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒரு குட்டி கதை ஒன்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்

ஜப்பானில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் சாமர்த்தியமானவர். அவர் எந்த போருக்கு சென்றாலும் மிக சுலபமாக வென்று விடுவார். அவர் படை ரொம்ப சின்ன படை.  இப்படி போருக்கு சென்று இருக்கும் சமயத்தில் தளபதிக்கும் படைக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

இத்தனை நாள் சின்ன படைகளுடன் போரிட இப்போ எதிர்கொள்ள கூடிய படை மிகப் பெரிய படை இவர்களை எப்படி எதிர்ப்பது என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். பின் மன்னனிடம் சென்று கேட்க இதுவரை நாம் போரிட்டது மிகச் சிறிய படை இப்பொழுது நாம் போரிடப் போவது மிகப் பெரிய படை.

அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று கேட்டனர். அதற்கு மன்னன் எதிர் பக்கத்தில் இருக்கக்கூடிய கோவிலைப் பார்த்து இந்த பக்கம் சென்றால் நம்ம ஊருக்கு செல்லலாம். அந்தப் பக்கம் சென்றால் போரிடலாம். இப்போது கோவிலில் நாணயத்தை சுண்டி விடுவோம்.

நான் நினைத்து சின்னம் விழுந்தால் நான் நினைத்த சின்னம் விழுந்தால் போருக்கு,  வேறு சின்னம் விழுந்தால் நாட்டிற்கு திரும்பி விடலாம். எல்லாம் கடவுள் செயல் என்று கூறி சென்றனர். பின் போருக்குச் செல்ல சின்ன படை பெரிய படையை ஜெயித்து விட்டது.

தெய்வ பக்தியுடன் ஜெயித்த பின் கொண்டாட்டத்தின் போது நாம் வெற்றி பெற்றோம் என்று கூறும் போது மன்னர் அந்த நாணயத்தை காட்டுகிறார். இரண்டு பக்கமும் ஒரே சின்னம்தான் இருந்தது.

இதே போல் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, பயத்தை விட நம்பிக்கை அதிகமாக இருந்தால் சுலபமாக எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கொள்ளலாம், வெற்றி காணலாம். தற்போது உள்ள சூழ்நிலையை பொருத்தவரை பயம் தேவையில்லை. பாதுகாப்பும் நம்பிக்கையும் தான் மிக மிக அவசியம் இதை புரிந்து கொண்டு நேர்மறையான இந்த கதையை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Categories

Tech |