நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் , நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், அமலாபால், சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Happy to share the First Look of #KuttiStory, An anthology Produced by @VelsFilmIntl @IshariKGanesh Dir by #NalanKumaraswamy#KuttiStoryFromFeb12#ItsAllAboutLove #KuttiStoryFirstLook @AditiBalan @sreekar_prasad @Ashkum19 pic.twitter.com/gfj4BhJS5d
— VijaySethupathi (@VijaySethuOffl) February 1, 2021
இந்நிலையில் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .