Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு ஒரு “குட்டி ஸ்டோரி”… காதல் கலாட்டா… விஜய் சேதுபதியின் நடிப்பு திறமை… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

குட்டி ஸ்டோரி என்ற அந்தாலாஜி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஆந்தாலாஜி என அழைக்கப்படும் குறும்படங்கள் பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவ்வாறாக புத்தம் புது காலை, பாவக் கதைகள் மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம்மேனன், வெங்கட்பிரபு, ஏ. எல். விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து குட்டி ஸ்டோரி என்ற அந்த ஆந்தாலாஜி திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இதனை அடுத்து முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக புகழ் அதிதி பாலன் நலன் குமாரசாமி இயக்கியுள்ள பாகத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ஆந்தாலாஜி  படமான இந்த குட்டி ஸ்டோரி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |