ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் மோசமான சுழலுக்கு பிராந்திய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக அமெரிக்கா நேட்டோ படைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவி புரிந்து வந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானை தங்களின் கைவசப் படுத்தியுள்ளனர். இதனால் அங்கு சில நாட்களாக மோசமான நிலைமை நீடித்து வருகிறது. இதனை அடுத்து “குவாட்” என்ற அமைப்பு ஏற்படுத்த போவதாக பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “இந்த குவாட் கூட்டமைப்பில் பிராந்திய நாடுகளான அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் போன்றவை ஆப்கானின் சமாதான முயற்சிகளில் முன்னெடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த குவாட் என்ற வார்த்தைக்கு 4 தரப்பு பாதுகாப்பு என பொருள். மேலும் பிராந்திய நாடுகளின் இணைப்பிற்கு நிலைத்தன்மை மற்றும் அமைதி மிகவும் முக்கியமானதாகும். இந்த பிராந்திய நாடுகள் வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துத்துதல் மற்றும் வலுப்படுத்துதல், போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குதல் போன்ற ஒத்துழைப்புகளை நல்க விரும்புகின்றனர். அதன்படி ஒருமித்த மனத்துடன் ஒத்துழைப்பின் முடிவுகளை எடுக்க வரும் நாட்களில் ஒன்றிணைவு ஏற்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு இதே போன்ற குவாட் கூட்டமைப்பு (அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.