Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவருக்கு என்னாச்சு… குவைத் நாட்டிற்கு சென்ற பெண்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

குவைத் நாட்டிற்கு வேலை பார்க்க சென்ற பெண்ணின் நிலை குறித்து குடும்பத்தினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இந்நிலையில் விமலா கூலி வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்திற்கு செலவு செய்து வந்துள்ளார். ஆனால் இந்த வருமானம் குடும்பத்தை சமாளிக்க போதுமானதாக இல்லாததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குவைத் நாட்டிற்கு ஏர்வாடியில் வசிக்கும் ஒருவர் மூலம் வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து விமலா தனது குடும்பத்தினருடன் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். அதன்பிறகு விமலாவுக்கு அந்த வேலைக்கு சென்று கொஞ்ச நாட்களில் போதிய உணவு, வேலை செய்ததற்கான பணம் போன்றவற்றை கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்தில் விமலா புகார் செய்துள்ளார். இதனையடுத்து விமலாவை அவரது குடும்பத்தினர் ஊருக்கு வருமாறு கூறியுள்ளனர். அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் விமலாவிடமிருந்து தகவல் ஏதும் வராத காரணத்தால் மணி அச்சமடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது மனைவியை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார். இதனைப்பற்றி மாவட்ட அதிகாரிகள் ஆன்லைனில் வெளியுறவு அமைச்சகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் குவைத் நாட்டிலிருந்து திடீரென விமலா இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர் இறந்ததற்கான சான்றிதழ் எதுவும் வரவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்திடம் புகார் செய்யச் சென்ற விமலாவின் மகன் ரஞ்சித் குமார் தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவருடன் உடன் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், அவர்களுடன் சென்றவர்களும் ஊர் திரும்பி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது தாயார் மட்டும் வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் நிலையை குறித்து குடும்பத்தினர் மிகவும் கலக்கத்தில் இருந்துவருகின்றனர்.

Categories

Tech |