இந்திய தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாள் அடிப்படையில் பொதுமக்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். கிசான் பத்ரா திட்டத்தில் இதுவரையில் 6.9% வட்டி நடைமுறையில் இருந்து. இந்த வட்டி விகித ஒவ்வொரு காலாண்டு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் தொடர்ந்து இதற்கான வட்டி உயர்த்தப்படவே இல்லை. இந்நிலையில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 7% கிடைக்கும். அதனைத் தொடர்ந்து கிசான் விகாஸ் பத்திரத்தை தனிநபரோ அல்லது 3 பேர் வரையில் கூட்டாக வாங்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது பாதுகாவலர் அல்லது உறவினர் வாங்க முடியும். ஒரு நபரின் பெயரில் இருந்து மற்ற நபரின் பெயருக்கு இந்த பத்திரத்தை மாற்ற முடியும். அதனை போல ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தது ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். வருமான வரி சட்டம் 80 சி யின் கீழ் வரை சலுகை கிடைப்பது இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். இதனையடுத்து கொரோனா பிரச்சினையை தொடர்ந்து சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் இதுபோன்ற உத்திரவாத தரும் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். சந்தை நிலவரங்களால் இந்த திட்டத்தில் எந்தவித பாதிப்பை ஏற்படாது. இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணம் 123 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.