பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 68/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 ரன்களில் குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அகர்வாலும், கெயிலும் ஜோடி சேர்ந்தனர்.. இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொறுமையாக எதிர் கொண்டு விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இதையடுத்து வீசிய கெளதம் 9 ஓவரின் முதல் பந்தில் கெய்ல் சிக்சர் அடித்தார். அதே ஓவரில் அகர்வால் 22 (25) எல்லைக்கோடு அருகே குல்கர்னி வசம் பிடிபட்டார். இதையடுத்து களமிறங்கிய சர்ப்ராஸ் கான், 6 (6), கெய்ல் 28 (26) இருவரும் விளையாடி வருகின்றனர்.