தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பல மாதங்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் மிகுந்த காலதாமதம் இருந்து வந்தது. குறிப்பாக டெல்லி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எல். முருகன் என்பவரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருக்கக் கூடிய ஜேபிநட்டா நியமனம் செய்துள்ளார்.
தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்படக் கூடிய எல்.முருகனை தான் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நியமனம் செய்துள்ளது. குறிப்பாக நயினார் நாகேந்திரன் , பொன் ராதாகிருஷ்ன, வானதி சீனிவாசன் ,ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் ஆலோசனை பட்டியலில் இருப்பதாகா செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக எல்.முருகனை டெல்லியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமை நீண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அதிகாரபூர்வமாக நியமனம் செய்திருக்கிறது.