எரிமலை வெடித்து சிதறியதால் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வடமேற்கில் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கேனரி தீவுகள். இத்தீவில் லா பல்மா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 85,000 மக்கள் வாழ்ந்து வாழ்கின்றனர். இத்தீவில் கடந்த 19 ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள லா பல்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் கடந்த நான்கு வாரங்களாக அதிலிருந்து தீ குழம்பு வெளியாகி வருகிறது.
குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் எரிமலையானது இரண்டாவது முறையாக வெடித்துள்ளது. ஆனால் எரிமலை வெடித்து சிதறுவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதத்தை தடுக்க முடிந்துள்ளது. இருப்பினும் இந்த எரிமலை வெடிப்பினால் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இதிலிருந்து வெளிவரும் தீ குழம்பானது அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இதன் மூலம் காற்றில் விஷ வாய்க்கள் பரவ அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எரிமலை வெடிப்பு சிதறலால் எழும்புகின்ற கரும்புகையானது விண்ணை முட்டும் அளவிற்கு எழும்பியுள்ளது. குறிப்பாக எரிமலை வெடிப்பினால் வெளிவரும் சாம்பல்களானது அதிக அளவில் பரவியதால் அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எரிமலை அமைந்துள்ள தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் எரிமலை வெடித்ததில் இருந்து சுமார் 60 தடவை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் இருந்த 300க்கும் அதிகமான குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடம் தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது.