விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுனர் இடிபாட்டில் சிக்கி உள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் முன் புறத்தை கடப்பாறையால் உடைத்து லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.