லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து அவ்வழியாக அத்தாணி பகுதியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிய ஒரு லாரி வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த அந்த கார் திரும்பியது.
இதனால் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பியபோது நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சரிந்து விழுந்தது. மேலும் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.