முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் கிராமத்தில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் தனது உறவினரான சிவா என்பவருடன் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்ததாக இருக்கும் ராயப்பனூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற லாரி திடீரென பழுதாகி நின்றதால் அதன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விக்ரம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.