வேன் நிலைதடுமாறி லாரி மீது மோதியதால் 15 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று எம்.பி.டி சாலையில் சென்றுள்ளது. அப்போது வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததால் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது.
இதில் வேனில் இருந்த முரளி உள்பட 10 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தமாக 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.