கன்டெய்னர் லாரி மோதி 15 ஆடுகள் உயிரிழந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள இடையத்தான்குடி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் அலங்கிரி-செம்பியன்மாதேவி பகுதியில் பட்டி அமைத்து தனக்கு சொந்தமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் முத்துக்குமார் ஆடுகளை மேய்ச்சலுக்காக உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒட்டி சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அந்நேரம் அந்த வழியாக அதிவேகமாக சென்ற லாரி மோதி 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.