Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாரம் ஏற்றி வந்த லாரி…. மின் கம்பங்கள் சேதம்…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரி மோதி 2 மின்கம்பங்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியானது பாட்டிகுளம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென 2 மின் கம்பங்கள் மீது மோதியது. இதில் இரும்பு கம்பம் ஒன்று வளைந்து விட்டது. அதன்பின் மற்றொன்று சிமெண்ட் கம்பம் என்பதால் பாதி உடைந்து வீட்டின் மேலே விழுந்து சேதம் அடைந்துள்ளது.

இதனை அடுத்து மின்கம்பிகள் அனைத்தும் அறுந்து கீழே விழுந்தது. பின்னர் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நகருக்கு வெளியில் பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சாலை வைப்பதற்கு அளவீடு பணிகள் செய்த நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

Categories

Tech |