Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மளிகை பொருட்கள் வாங்க சென்ற மாணவன் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலந்திரா ராசன் வட்டம் பகுதியில் தட்சிணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது மண்டலவடி கூட்டு ரோடு அருகில் சென்ற நிலையில் பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பிரவீன்குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |