சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தனது சைக்கிளில் சம்பந்தம் கிராமம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று மோதியது.
இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.