மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி அவரை இழுத்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதில் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதன்பின் லாரியில் சிக்கிய நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.