லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆணைமல்லூர் கிராமம் நடுத்தெருவில் குறளரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் வாலாஜா டோல்கேட்டுக்கு வந்து அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலைக்கு கம்பெனி பேருந்தில் சென்று வந்திருக்கிறார்.
பின்னர் குறளரசன் வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் அருகில் சென்ற நிலையில் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.