லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பரதராமி பகுதியில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் நண்பரான வெங்கடேசன் என்பவர் தனது டிராக்டரை பழுது பார்ப்பதற்காக ஆரணி பகுதி நோக்கி சென்றுள்ளார். அப்போது வெங்கடேசனை பின் தொடர்ந்து சூர்யா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனையடுத்து தாமரைப்பாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது வெங்கடேசன் டிராக்டரை நிறுத்தியுள்ளார். அந்நேரம் எதிரே வந்த லாரி சூர்யா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.