லாரி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் தேங்காய் மண்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த மண்டியில் இருந்து தேங்காய் ஓடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் லோடு ஏற்றி வந்த கூலித் தொழிலாளர்கள் இமானுவேல், யோனோவா, ஜெகன், அரவிந்த் மற்றும் விமல் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அறிந்து வந்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.