கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கேரட் மூட்டைகளை லாரியில் ஏற்றி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழுவுவதற்காக கொண்டு சென்றனர். இந்த லாரியை ஸ்டீபன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்கள் கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் லாரியானது எல்லக்கண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தார் 17 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கேரட் மூட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றி பின் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.