Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருந்துச்சு…? சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி அருகில் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிலிருந்த  மூட்டைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதன்பின் லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பதும், இவர் பெங்களூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்றது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குட்கா பொருட்கள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பெரியசாமியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |