லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கட்டகோபுர வீதி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.