Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் சந்தைகோட்டியூர் தெருவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த சக்கரவர்த்தி, சாதிக் பாஷா, ஆரோன் டேவிட் மற்றும் சங்கர் ஆகிய 4 பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். மேலும் சங்கர் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |