பாரதிய கிசான் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் சார்பாக விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தில் விவசாய விளைபொருட்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்கவேண்டும். அதன்பின் பாலை விவசாய விளைபொருளாக அறிவித்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதனைதொடர்ந்து அமராவதி அணையை தூர்வாரி, பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேலும் சின்ன வெங்காய ஏற்றுமதி மண்டலமாக திருப்பூரை அறிவித்தல் மற்றும் தேங்காய் கொப்பரைக்கு அதிகபட்சமாக 150 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் சேனாபதி, பொருளாளர் திருமலைசாமி, கோட்ட பொருப்பாளர் அருள்பிரகாசம் போன்றோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன்பின் பாரதிய கிசான் சங்கத்தினர் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் வினீத்திடம் கொடுத்து முறையிட்டனர்.