கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஆலம்பட்டி பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.