Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பற்றாக்குறையை சந்திக்கும் இங்கிலாந்து…. 45 உணவகங்கள் மூடப்பட்ட சோகம்….!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கோழி இறைச்சி பற்றாக்குறையினால் பிரபல உணவு நிறுவனத்தைச் சேர்ந்த 45 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து அந்நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள்.

இதனால் லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறையும் இங்கிலாந்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் nando’s என்னும் உணவு நிறுவனம் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவு நிறுவனத்தில் peri peri என்னும் கோழி இறைச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த உணவாக உள்ளது.

இந்நிலையில் nando’s உணவு நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த உணவான peri peri என்னும் கோழி இறைச்சிக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நிறுவனத்தை சேர்ந்த சுமார் 45 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

Categories

Tech |