Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட தட்டுப்பாடு…. சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டிகள்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து நிலவிவந்த கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் பற்றாக்குறையினால் அந்நாட்டிலுள்ள வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டிலிருந்த பல கனரக வாகன ஓட்டிகள் பிரக்சிட்டையடுத்து தத்தம் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

இதனால் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையினால் அங்கு உணவு உட்பட பல வகையான அடிப்படை தேவைகளுக்கும் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்தில் தற்போது எரிபொருள் விற்பனைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகையினால் இங்கிலாந்து நாட்டிலிருக்கும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசல் பெறவேண்டி அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் முன்பாக நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் கூறியதாவது, இங்கிலாந்தில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பெட்ரோலோ அல்லது டீசலோ வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |