நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவின் 2 ஆவது அலையை தடுக்க பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 84 நிரந்தர மையங்களும், 25 தற்காலிக மையங்களும், கூடுதலாக 7 முகாம்களும் தடுப்பூசி போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதாவது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 11 மணி வரையில் வந்த நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் வந்த நபர்களிடம் “தடுப்பூசி இல்லை” என்று கூறியுள்ளனர்.
இதேபோல் பல இடங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பாளையங்கோட்டையிலிருக்கும் அரசு மருத்துவமனையின் வளாகத்தினுள் அமைந்திருக்கும் மையத்திற்கு ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது, இன்னும் ஓரிரு தினங்களில் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வந்துவிடும். அதன்பின் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றுள்ளார்கள்.