Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு உடை..! சிகிச்சையை நிறுத்தும் மருத்துவர்கள் ? சிக்கலில் பிரிட்டன் …!!

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர்

இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 596 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால்  மொத்தம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16060 என பதிவாகியுள்ளது. அதோடு ஒரே நாளில் 5850 பேர் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையின் காரணமாக தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை நிறுத்தப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துருக்கியில் இருந்து தரப்படுவதாக இருந்த 4 லட்சம் பாதுகாப்பு உடைகள் வருவதற்கு தாமதமாகும் சூழலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழ்நிலை  நீடிக்கும் என்றால் மருத்துவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ய கூடும் அல்லது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த கூடும் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றை தடுக்க முன்னின்று பாடுபடும் மருத்துவர்களை அரசு ஆபத்தில் தள்ளியுள்ளது என்றும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

இதனிடையே சில நாட்களில் மருத்துவ உடைகளுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என சுகாதார செயலாளர் ஹான்காக் ஒப்புக்கொண்டுள்ளார். துருக்கியில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ உபகரணங்கள் தாமதமாவதால் 24 மணி நேரங்களுக்கு மருத்துவ சேவை தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவு இல்லாத காரணத்தினாலே இதுவரை 80 சுகாதார ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர் என கூறும் சுகாதார அமைப்புகள் தற்போதுள்ள சூழலுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உடைகள் தேவைப்படுகிறது என சுட்டிக் காட்டியுள்ளனர்.

Categories

Tech |