Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை… ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது… கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதால் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக தற்போது குறைந்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 950 கன அடியாக குறைக்கப்படுகிறது. பின்னர் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதன்பின் தண்ணீரானது படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் அமைத்திருக்கும் சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |